குளிப்பதை இளைஞன் பார்த்ததால், இளம்பெண் தற்கொலை

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (12:42 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் 20 வயது இளம் பெண் அவர் வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது அதை ஒரு வாலிபர் பார்த்துள்ளார். அதனால் அந்த இளம்பெண் விரத்தியில் தற்கொலை செய்துக் கொண்டார்.


 

 
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் தெலானா கிராமத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் அவரது வீட்டில் குளித்து கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த 26 வயது இளைஞன் குளிப்பதை வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
 
இதனிடையே அந்த பெண்ணின் மாமா வீட்டிற்குள் நுழைய அந்த இளைஞன் மாட்டிக் கொண்டான். அவனை பெண்ணின் உறவினர்கள் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதை அறிந்த இளைஞரின் உறவினர்கள் பெண்ணின் வீட்டிற்குள் நுழைய, இருதரப்பினர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
 
இதில் விரத்தி அடைந்த அந்த இளம்பெண் தீக்குளித்துள்ளார். தீகாயமடைந்த அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  
அடுத்த கட்டுரையில்