குஜராத் தேர்தலில் பாஜகவை வெற்றிபெற வைத்த தமிழர்கள்!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (14:50 IST)
நாடே உற்றுநோக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்குகிறது. இந்த தேர்தலில் குஜராத் வாழ் தமிழர்களின் வாக்குகளை பாஜக அள்ளியுள்ளது.
 
குஜராத்தின் மணி நகர் தொகுதியில் தமிழகர்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்த தொகுதியில் வழக்கம் போல பாஜக வெற்றிவாக சூடியிருக்கிறது. இந்த மணி நகர் தொகுதி குஜராத்தில் பாஜகவின் கோட்டையாக உள்ளது.
 
தமிழர்கள் அதிகம் வாழும் இந்த மணிநகர் தொகுதி தான் மோடியை மூன்றுமுறை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் குஜராத் சட்டமன்றத்துக்கு அனுப்பியது. தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. ஆனால் குஜராத்தில் தமிழ்ர் வாழும் பகுதியான மணி நகர் பாஜக கோட்டையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்