கர்நாடக தேர்தல்: பாஜகவின் இலக்கு இதுதானோ?

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (13:28 IST)
காங்கிரஸ் இல்லாத இந்தியா என அனைத்து மாநில தேர்தகளிலும் கூறி ஆட்சியை பிடித்து வருகிறது மோடி தலைமையிலான பாஜக. அந்த வகையில் கர்நாடகவிலும் பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. 
 
கடந்த 12 ஆம் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கியது. தற்போதையை நிலைவரை பாஜக முன்னிலையில் உள்ளது. 
 
மேலும், கர்நாடகாவில் பாஜக தனிப்பெருமான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. இதன் மூலம், பாஜக தனித்து ஆளும் மாநிலங்களில் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 
 
கடந்த ஓராண்டில் நடந்த தேர்தலில், பாஜக உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலந்து, மேகாலயா தற்போது கர்நாடக ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
 
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது மூலம், பாஜக தனித்தோ அல்லது கூட்டணியாகவோ ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. 
 
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம், ஓரிசா ஆகிய மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது. பஞ்சாப் மற்றும் மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்