எம்பிக்கு போதை மருந்து கொடுத்து புளுபிலிம் எடுத்த இளம்பெண் கைது

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (05:01 IST)
குஜராத் மாநிலத்தின் எம்பி ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து அவருடன் உல்லாசமாக இருந்த நிலையில் வீடியோ எடுத்து எம்பியை மிரட்டிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது



 
 
குஜராத் மாநில பாஜக எம்பி கே.சிபட்டேல் என்பவர் சமீபத்தில் காவல்துறையினர்களிடம் ஒரு புகார் அளித்தார். அதில் இளம்பெண் ஒருவர் தனக்கு போதைப்பொருள் கொடுத்து தன்னை மயக்கி தன்னுடன் நிர்வாணமாக உடலுறவு கொண்டதாகவும், அதை புளூபிலிமும் எடுத்து தன்னிடம் ரூ.7 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். புளுபிலீம் எடுத்த கேமிராமேன் அஜய்குமாரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை செய்த போலிசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை ஏற்றுக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்