மண்ணின் மைந்தரான ரஜினிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ அனில் கேட்டே வலியுறுத்தியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிகராக இருந்தாலும், அரசியல் ரீதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நபராகவே பார்க்கப்படுகிறார். தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை அவர் வைத்திருப்பதால், ஒவ்வொரு சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போதும், அவரின் ஆதரவை பெற அனைத்துக் கட்சிகளும் முயற்சி செய்வது வழக்கம்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, சென்னையில் பிரச்சாரம் செய்ய வந்த மோடி நேராக ரஜினிவிட்டிற்கு சென்று அவரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இவர் மத்திய அரசிடமிருந்து பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ரஜினிக்கு மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ அனில் கேட்டே கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் பேசும் போது “ மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். அவர் இந்த மண்ணின் மைந்தர். எனவே அவருக்கு முதலில் மகாராஷ்டிரா பூஷண் விருதை வழங்கவேண்டும். அதோடு, பாரத ரத்னா விருதை வழங்கவும், மத்திய அரசுக்கு பரிந்துரைத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் பேசினார்.