போலீஸ் சட்டையை உருவுவேன்: வாயைவிட்டு மாட்டிய பாஜக தலைவர் ; வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (19:16 IST)
மேற்கு வங்கத்தில் பாஜக அமைச்சர் ஒருவர் போலீஸாரின் சட்டையை உருவுவேன் என கூறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக தலைவர் திலிப் கோஷ், முதலமைச்சர் மம்தா பேனர்ஜியின் இந்த ஆட்சியில் போலீஸார் வேண்டுமென்றே பாஜக நிர்வாகிகள் மீதும் தொண்டர்கள் மீது வழக்கு போடுகின்றனர். இப்படி பட்டவர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் சட்டையை கழற்றுவோம். அவர்களுக்கு பாடம் புகட்டுவோம்.
 
ஏற்கனவே தமிழகத்தில் கருணாஸ் இதே போல் போலீஸாரை வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்டு பின்னர் கம்பி எண்ணிவிட்டு வந்தார்.
 
இந்நிலையில் பாஜக தலைவர் ஒருவரே இப்படி பொறுப்பற்று போலீஸாரை விமர்சித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க நெட்டிசன்கள் அந்த பாஜக தலைவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்