பாஜகவுக்கு சாதகமாக முதல் முடிவுகள்: உற்சாகத்தில் தொண்டர்கள்

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:15 IST)
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ணத்தொடங்கப்பட்ட நிலையில் முதல்கட்ட முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளது. அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி 84 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 27 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
 
கர்நாடகாவில் பாஜக கூட்டணி நல்ல முன்னிலையை ஆரம்பத்திலேயே பெற்றுள்ளது. தமிழக மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.
 
இருப்பினும் தற்போது எண்ணப்படுவது தபால் வாக்குகளே. 8.30 மணிக்கு பின்னரே வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். அப்போதுதான் உண்மையான முன்னிலை நிலவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்