பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000: பாஜகவின் தேர்தல் வாக்குறுதி..!

புதன், 15 பிப்ரவரி 2023 (13:16 IST)
மேகாலயா மாநிலத்தில் மார்ச் 15ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சற்றுமுன் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
 
மேகாலயம் மாநில மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கும் தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வெளியிட்டுள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் மேகாலயாவில் ஏழாவது ஊதிய குழு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் மேகாலயா மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 மதிப்புள்ள பத்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி வரை இலவச கல்வி வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
 
பல்வேறு அதிரடி அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டதை அடுத்து நம் மாநிலத்தில் பாஜக வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்