பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை விவகாரம்- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (21:20 IST)
டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை செய்த விவகாரம் தொடர்பாக முதல்வர் முக. ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
 
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான ஆவண திரைப்படம் சமீபத்தில் பிபிசி வெளியிட்ட நிலையில் அதற்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வருமான வரி சோதனை உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அதாவது ஜேபிசி வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம், ஆனால் இந்த அரசு பிபிசியை துரத்துகிறது என காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் கிண்டல் செய்துள்ளார்.

ஆனால் தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரியினர் விளக்கம் அளித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை செய்து வருவதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியாகி மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்தது என்பதும் இந்த ஆவண படத்தை எதிர்க்கட்சிகள் பல்வேறு இடங்களில் திரையிட்டு வருகின்றனர்.

 பல மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஆவண படத்தை வெளியிட்டு வருவது அடுத்தாண்டு வரவுள்ளா பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை செய்து வருகின்றனர். பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இது இந்தியா அளவில்  இன்று பேசு பொருளாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வரித்துறை ஆகிய அமைப்புகளை அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த அமைப்புகள் சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடக்க வேண்டும்.

தங்கள் ஆட்சியில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஊடகச் சுதந்திரத்தை முடக்குபவருக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்