இந்த நிலையில், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில், முன்னாள் மாகாண கவர்னர் நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
இன்று இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த தேர்தலில் மக்களின் ஆதவில், பொருளாதாரத்தை மீடெடுக்க வேண்டும், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், நாட்டை வலுப்படுத்த புதிய தலைமுறை தலைமையேற்க வேண்டிய நேரமிது என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, குடியரசு கட்சி சார்பில், டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் உட்கட்சியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவெ, இந்திய வம்சாவளியைச் சேந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.