யானைக்கு மரண தண்டனை விதித்த பீகார் அரசு!!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2017 (18:10 IST)
பீகார் மாநிலத்தில் 25 வயதுடைய யானை ஒன்று 15 பேரை கொன்றதால் அதனை சுட்டுக்கொல்லுமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


 
 
அந்த யானைக்கு பெற்றோரை பிரிந்ததால் மதம் பிடித்துள்ளது. இதனால், வனப்பகுதியில் வசித்து வந்த 4 பேரை மிதித்து கொன்றுள்ளது. 
 
பின்னர், அருகில் உள்ள ஜாகர்கண்ட் வனத்தில் வசித்து வந்த 11 பேரை யானை தாக்கி கொன்றுள்ளது. 
 
இவ்வாறு 15 பேரை கொன்றுவிட்டு வனத்தில் திரிந்து வரும் யானையை பிடிக்க வன உயர் அதிகாரிகள் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களது முயற்சிகள் பல வீணாய் போனது. 
 
இதனால் வேறுவழியின்றி யானையை சுட்டு கொன்றுவிடுமாறு அரசு உத்தரவு பிறபித்துள்ளது. 
 
யானை ஒன்றை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்