பீகார் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் மோசமான அணை பாராமரிப்பால் திறந்து விடப்பட்ட கங்கை நீரால் பீகார் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் மோசமான அணை பாராமரிப்பால் நேபாளத்தில் இருந்து திறந்து விடப்பட்ட கங்கை நீரால் பிகார் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ், கங்கை நீர் மக்களின் வீட்டு வாசலுக்கே செல்வதால், அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எல்லோர் வீட்டு வாசலுக்கும் கங்கை நீர் சென்றுவிடாது, என்று கூறியுள்ளார்.
இவர் இத்தகைய கருத்துகளை கூறி பாஜக அமைப்பினரை கிண்டல் செய்து வருகிறார். கங்கை நீரை புனித நீராக விற்பனை செய்த பாஜக அரசை கிண்டல் செய்துள்ளார்.
மேலும் கங்கை நதியில் அபாயகரமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று கூறியுள்ளார்.