பாஜக மூத்த உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த ஆகஸ்ட் 24 அன்று உடல்நல குறைவால் காலமானார். அவரது உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி அப்போது வெளிநாடு பயணத்தில் இருந்ததால் அவரால் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியவில்லை.
பிறகு தாயகம் திரும்பிய பிரதமர், அருண் ஜெட்லி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் அருண் ஜெட்லிக்கு மரியாதை செய்யும் வகையில் அவருக்கு பீகாரில் சிலை நிறுவப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.