கடலூரில் நடக்க இருக்கும் தேமுதிக மாநாட்டுக்கு அனைவரும் வாருங்கள், கரூர் மாதிரி எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காது, அனைவரையும் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக மாநாடு நடக்க இருக்கும் நிலையில், அதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார்.
"கரூர் மாதிரி எந்தவித அசம்பாவிதமும் நடக்காது" என்றும், "உங்களை நாங்கள் உபசரித்து பாதுகாப்பாக கவனித்து வீடு சேரும் வரை அத்தனை வசதிகளும் செய்து தருவோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.