கரூர் சம்பவம் தொடர்பான வழக்கால் தவெக பிரமுகர்கள் மாயமாகியுள்ள நிலையில், கட்சிக்கு புதிய இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குவதில் விஜய் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தவெக மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொ.செ நிர்மல் குமார் தலைமறைவான நிலையில் அவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி நடக்காமல் இருக்கவும், கட்சியை வலுப்படுத்தவும் விஜய் ஆலோசனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கட்சி செயல்பாடுகளில் ஈடுபட முடியாத நிலையில், பிற கட்சியிலிருந்து வந்து தவெகவில் இணைந்த பலம் வாய்ந்த அரசியல் பிரமுகர்களை கொண்டு இரண்டாம் கட்ட தலைவர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் திமுக, அதிமுக கட்சிகளில் மாநாடு, பேரணிகளை கட்டுப்படுத்தும் தொண்டர் படை உள்ளதுபோல தவெகவிலும் தொண்டர் படை அமைத்து சிறப்பு பயிற்சிகள் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்.
Edit by Prasanth.K