பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்!!

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (19:39 IST)
பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மத்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்டீரிய ஜனதா தளமும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. 
 
முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக ராஷ்டிர ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியும் உள்ளனர். 
 
இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு லாலு பல கோடிகள் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் தேஜஸ்வி பெயரும் இடம் பெற்றது. 
 
இதனால் அதிர்ச்சியடைந்த நிதீஷ் குமார் ஊழல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க தேஜஸ்விக்கு உத்தரவிட்டார். ஆனால், அவர் இதை கண்டுகொள்ளவில்லை. மேலும், லாலு பிரசாத் தேஜஸ்வி, துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என அறிவித்தார். 
 
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் முற்றியது. எனவே ராஷ்டிர ஜனதாதள எம்எல்ஏக்கள், கூட்டத்தில் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் ராஜினாமா செய்வது என முடிவு செய்தார். 
 
அதன் படி நிதீஷ்குமார் ஆளுநர் கேசரி நாத் திரிபாதியிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர், என்னால் ஊழலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் ராஜினாமா செய்தேன் என நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்