பாஜக முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமித்ஷா

சனி, 8 செப்டம்பர் 2018 (16:46 IST)
பிரதமர் மோடி, பாஜக மூத்ததலைவர்கள் மற்றும் நுற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றுள்ள பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று துவங்கி  இரண்டு நாட்கள் நடைபெறும்.


இந்நிலையில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும் விரைவில் நடைபெற உள்ள நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் அதில் பேசிய பாஜக தேசிய தலைவர்  அமித்ஷா :அடுத்த ஆண்டு  நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமித்ஷா வின் தலைமையிலேயே வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும் பா.ஜ.கவின் உட்கட்சி  தேர்தலை தள்ளிவைக்கவும் கட்சியினர் கூடி ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்