பெங்காலி மொழிதான் ஆசியாவிலேயே அதிக நபர்களால் பேசப்படும் இரண்டாவது பெரிய மொழி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது நாம் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் நமது தாய்மொழியை மறக்கக்கூடாது என்றும் தாய் மொழியில் படித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்குவந்த ஆளுநர் கூட பெங்காலி மொழியில் ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் அவருக்கு தனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே மிக அதிகம் பேசும் மொழிகளில் இரண்டாவது இடத்தை பெங்காலி மொழி பெற்று உள்ளது என்றும் உலக அளவில் ஐந்தாவது பெரிய மொழியாக பெங்காலி மொழி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.