ஆந்திராவில் மீன்மழை – அதிர்ச்சியில் பொதுமக்கள்!!!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (12:42 IST)
ஆந்திராவில் உள்ள அமலாபுரம் என்ற பகுதியில் நேற்று தெரு முழுவதும் மீன்களாகக் காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆந்திராவில் நேற்று பெயிட்டிப் புயல் கரையைக் கடந்தது. மணிக்கு சுமார் 70 முதல் 80 கி.மீ. வரை வீசிய புயல்காற்றால் ஆங்காங்கே நிலச்சரிவு, இடிபாடுகள் மற்றும் மரங்கள் விழுதல் எனப் பல அசம்பாவிதங்கள் நடைபெற்றன.

ஆனால் அமலாபுரம் எனும் பகுதியில் நேற்று வினோதமான சம்பவம் நடைபெற்றது. பெயிட்டி புயலால் மழையும் காற்றும் வீசிய அந்தப் பகுதியில் வானத்தில் இருந்து மீன் மழைப் பொழிவதைப் பார்த்து வாய்பிளந்துள்ளனர். சாலை முழுவதும் மீன்களாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.  இந்த மீன்மழையால் அந்தப் பகுதியில் அசாதாரணமான சூழல் உருவானது.

பெயிட்டி போன்ற வலுவான புயல் காற்று வீசும் போது கடல்புறத்தில் இருந்து மீன்களை வாரி எடுத்து வந்து நிலப்பரப்பில் போட்டுவிட்டு செல்லும் இதுபோன்ற சம்பவங்கள் ரொம்பவும் அரிதாகவே நடக்கும் எனத் தெரிவிக்கின்றனர், விவரமறிந்தவர்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்