ஒரிசாவில் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அதனை வனத்துறையினர் பத்திரமாக பிடித்துச்சென்றனர்.
ஒரிசாவின் கோராபுட் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த கரடி ஒன்று தெருக்களில் ஜாலியாக ஓடி திரிந்துள்ளது. இதனை அங்குள்ள மக்கள் பயம் கலந்து ஒரு வித பரபரப்புடன் பார்த்தனர். இந்த காட்சி அந்த தெருவில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நன்றி: ANI
கரடி குடியிருப்பு பகுதிக்குள் நுழந்த தகவலறிந்த வனத்துறையினர் அந்த கரடியை பத்திரமாக பிடித்து கூண்டில் அடைத்து கொண்டு சென்றனர்.