அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள்...பிரதமர் மோடி

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (22:21 IST)
சீனாவில் இருந்து  பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவி வருக் கொரோனா தொற்றினால் பல எழுபதுலட்சத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதமாக உள்ளது எனவும் கடந்த 24 மணி நேரத்தில் 7,135 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வாசனை, சுவை தெரியவில்லை எனில் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் : காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, வயிற்றுப்போக்கு இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி சுகாதாரத்துறைக்கு அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

அவசரக் காலத்திற்கு ஏற்க தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்