வங்கிகள் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (19:59 IST)
வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருடத்துக்கு 2 அல்லது 3 முறை வேலை நிறுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மார்ச் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் மீண்டும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து வங்கி ஊழியர் சம்மேளனம் நிர்வாகிகள் தெரிவித்தபோது ’ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 11 முதல் மார்ச் 13 வரை தொடர் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்தனர். மேலும் தங்களது கோரிக்கை குறித்து அரசுக்கு விண்ணப்பமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தங்களுடைய கோரிக்கையை ஏற்பட்டால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்றும் அவ்வாறு ஏற்கப்பட வில்லை என்றால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர் 
 
மார்ச் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களில் புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் ஆகும். மேலும் மார்ச் 14 ஆம் தேதி இரண்டாவது சனி, 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மொத்தமாக 5 நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை ஏற்பட்டால் வங்கி வாடிக்கையாளர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்றும் வங்கி பரிவர்த்தனைகள் கோடிக்கணக்கில் முடங்கும் என்றும் அஞ்சப்படுகிறது மேலும் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியும் இருக்காது என்பதால் பெரும்பாலான ஏ.டி.எம்கள் காலியாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் அதற்கு முன்னரே வங்கி வாடிக்கையாளர்கள் தேவையான பணத்தை ஏடிஎம்களில் எடுத்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்