பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வங்கிகள் இயங்காதா? பரபரப்பு தகவல்!

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (20:56 IST)
மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கான வரிச்சலுகைகள் அதிகம் இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் 
 
இந்த நிலையில் இந்த பட்ஜெட்டுக்கு பின் என்னென்ன பொருட்கள் விலை குறையும்? என்னென்ன பொருட்கள் விலை கூடும் என்று ஒரு விவாதமே தொழிலதிபர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் அதிக சலுகைகளை எதிர்பார்க்கலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன 
 
இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு திடீரென தங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை நடைபெறாமல் தடுக்க மத்திய அரசு வங்கி ஊழியர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசின் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் இதனை அடுத்து பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வங்கிகள் இயங்காது என்றும் திட்டமிட்டபடி தங்கள் அமைப்பின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
 
பட்ஜெட் தாக்கல் செய்யும் முக்கிய நாளில் வங்கிகள் இயங்காது என வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்