அசாம் மாநிலத்தில் பிறந்த பெண் குழந்தையின் இதயம் உடலுக்கு வெளியே மார்பின் மீது இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு இதயம் உள்ளே இல்லாமல் உடலுக்கு வெளியே இருந்ததால் மருத்துவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிகிச்சையில், இது ஒரு அரிதான குறைபாடு என்று கூறப்பட்டடுள்ளது.
இதற்கு Ectopia Cordis என்று பெயர். தற்போது இந்த குழந்தையை அசாம் அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை’க்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்க உள்ளனர்.