அயோத்தி ராமர் கோவிலுக்கு அடியில் காலக்குடுவை! – அதற்குள் இருப்பது என்ன?

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (13:46 IST)
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கு 2 ஆயிரம் அடி ஆழத்தில் காலக்குடுவை வைக்க உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அயோத்தி வழக்கில் கடந்த ஆண்டில் ராமர் கோவில் கட்ட அனுமதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5ம் தேதி நடைபெற உள்ளது.

நீண்ட வருட போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்டப்படுவதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது, அந்த வகையில் ராமர் கோவில் அமையும் இடத்தின் அடியில் 2000 அடி ஆழத்தில் டைம் கேப்சூல் எனப்படும் காலக்குடுவையை புதைக்க உள்ளார்கள். எதிர்கால சந்ததிகள் ராமர் கோவில் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் விவரங்கள் அதில் எழுதப்பட்டு குடுவைக்குள் வைத்து புதைக்கப்பட உள்ளது.

இதுதவிர கருவறையில் வெள்ளி செங்கல்கள் அமைப்பது, இதிகாசத்தில் ராமர் பயணித்த அனைத்து பகுதி மண் மற்றும் நதிநீர் ஆகியவற்றை சேமித்து வந்து கட்டுமானத்தில் சேர்க்கும் திட்டமும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்