கடந்த ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட நிலையில், இந்த கோவில் தினசரி காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பக்தர்கள் கூட்டம் காலை நேரத்தில் அதிகமாக இருப்பதால், தரிசன நேரம் காலை 6:00 மணிக்கே மாற்றப்பட்டுள்ளது.
நேற்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 6 மணிக்கு நடை திறந்தவுடன், 6:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 11:50 மணிக்குள் அனுமதி வழங்கப்பட்டு, அதன் பின் 12 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பின்னர், பகல் 1:00 மணி முதல் மாலை 6:50 வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மாலை 7 மணிக்கு சந்தியா ஆரத்தி வழிபாடு நடந்த பிறகு, இரவு 9:45 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.