சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை தானியங்கி கேமராக்கள் படம் பிடிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்
தானியங்கி கேமராக்கள் நம்பர் பிளேட்டை படம் பிடித்த பின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக்கட்டணம் பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எனவே சுங்க கட்டணம் கட்ட வேண்டும் என்பதற்காக வாகனங்கள் சுங்கச்சாவடியில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் செல்லும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை தற்போது இல்லை என்றும் அதற்கான சட்ட விதிகளைக் கொண்டு வந்தபின் விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் கட்டணம் கட்டுவதற்காக காத்திருக்கும் முறை தானியங்கி கேமராவால் படம் பிடிக்கும் முறையால் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்