கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா??

Arun Prasath

செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (11:17 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் ஆட்டோ கட்டணங்கள் உயரும் அபாயம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையில் நடந்த தாக்குலை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பால் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 71.57 என்ற உச்சத்தை தொட்டது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதன் எதிரொலியாக வாடகை கார் மற்றும் ஆட்டோ கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 20  சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்