கடந்த சில மாதங்களுக்கு முன்னால் திறக்கப்பட்ட மைசூர் பெங்களூரு அதிவிரைவு சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ செல்ல தடை விதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மைசூரில் இருந்து பெங்களூருக்கு அதிவிரைவில் செல்வதற்கு வசதியாக புதிய சாலை சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இந்த சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது
தடை செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாற்று சாலை இருப்பதாகவும் அந்த சாலைகளை மட்டுமே இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பெங்களூர் மைசூர் அதிவிரைவு சாலையில் இருசக்க வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.