அப்போது அவர் வரிசையில் நிற்காமல் நேராக தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கை செலுத்தினார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், வேட்பாளர் சிவகுமாரின் செயலை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய சுதாகர் என்பவரின் கன்னத்தில் சிவகுமார் பளார் என அறை விட்டார். சற்றும் தாமதிக்காத சுதாகர், சிவக்குமாரின் கன்னத்தில் பதிலுக்கு அறைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமாரின் ஆதரவாளர்கள் சுதாகரை சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் முடியும் வரை சிவக்குமாரை வீட்டுக் காவலில் வைக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.