ஆந்திர மாநிலத்தில் இன்னொரு பகுதியில் மோதல்.. கல்வீச்சு தாக்குதல்.. போலீசார் தடியடி..!

Mahendran

திங்கள், 13 மே 2024 (14:41 IST)
இந்தியாவில் ஏற்கனவே மூன்று கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற போதிலும் ஆந்திராவில் மட்டும் வாக்குப்பதிவின் போது தொடர்ச்சியாக ஆங்காங்கே பிரச்சனை ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
ஏற்கனவே இன்று காலை ஆந்திர மாநில தேர்தல் வாக்குப்பதிவு பதிவின்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும் ஒரு வாக்குச்சாவடியில் எம்எல்ஏ வை வாக்காளர் ஒருவர் கன்னத்தில் அறைந்த விவகாரமும் பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் தாடிபத்திரியில் வாக்குப்பதிவின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் திடீரென ஒருசிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் போலீசார் தடியடி
நடத்தினர். இந்த சம்பவத்தில்  போலீஸ் எஸ்.பி. மற்றும் காவலர்கள் சிலர் காயம் அடைந்த நிலையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி கூட்டம் விரட்டியடிக்கப்பட்டது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்