இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது, முதல் 3 கட்ட தேர்தலில் ஜூன் 4ம் தேதி இந்திய அரசு மாறப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. நினைவில் கொள்ளுங்கள், உங்களின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது மட்டுமன்றி உங்கள் முழு குடும்பத்தின் தலைவிதியையும் மாற்றும்.
எனவே, பொதுமக்கள் அதிக அளவில் திரண்டுவந்து, நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள். அந்த பிரச்னைகளை திசைதிருப்பமுடியாது என்பதைக் காட்டுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.