ராஞ்சியில் உள்ள அந்த இளம்பெண் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென நான்கு பேர் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது பெட்ரோலை ஊற்றிவிட்டுத் தப்பி சென்றுள்ளனர். பெட்ரோலை ஊற்றினாலும், அவர்கள் தீ பற்ற வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில் இது ஆசிட் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில், பெட்ரோல் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பெண்ணின் கண்களில் பெட்ரோல் பட்டதால் கருவிழி படலத்தில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.