ஏ.டி.எம்-ல் பணம் நிரப்ப புதிய விதிமுறை - கொள்ளை கட்டுப்படுத்தப்படுமா?

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (10:07 IST)
நகர்புறங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறையை அமுல்படுத்தியுள்ளது.


 
பொதுவாக இந்தியா முழுவதும் இரவு நேரங்களிலேயே ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பப்படுகிறது. இந்த பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. அப்படி பணம் நிரப்ப எடுத்துச்செல்லும் வாகனங்களை குறிவைத்து கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். சில இடங்களில் அந்த பணங்களை கொள்ளையடித்து சென்ற சம்பவங்களும் நடந்தன.
 
எனவே, இது தடுக்கும் பொருடு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு புதியை விதிமுறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, வங்கிகளில் இருந்து பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், தினமும் மதியத்திற்கு முன்பே வங்கிகளில் பணத்தை பெற்றுவிட வேண்டும். அதுவும், ஒரு வாகனத்தில் ரூ.5 கோடிக்கு மேல் எடுத்து செல்லக்கூடாது. வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 
மேலும், நகர்புறங்களில் இரவு 9 மணிக்கு மேலும், கிராமப்புறங்களில் மாலை 6 மணிக்கு மேலும் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பக்கூடாது என விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
 
இந்த பரிந்துரைகள்  மத்திய சட்ட அமைச்சக அனுமதிக்குப் பிறகு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்