ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் மே 1 முதல் அதிகரிப்பு என இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்திருக்கும் விதிமுறையால், பயனர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் கட்டணம் இன்றி மூன்று முறை மட்டுமே பணம் எடுக்க முடியும்.
இந்த நிலையில், ஒரு மாதத்திற்கான பரிவர்த்தனை அளவை கடந்து விட்டால், ஒவ்வொரு முறை ஏடிஎம் பயன்படுத்தும் போது ₹23 கட்டணம் என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ₹21 இருந்த நிலையில், இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்களை முன்னணி வங்கி நிர்வாகங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப தொடங்கியுள்ளன. மேலும் ₹23 உடன் வரியும் சேர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்திற்கு உள்ளான அளவுக்கு பின்னர், பேலன்ஸ் தெரிந்துகொள்ள மட்டும் ஏடிஎம் ஐ பயன்படுத்தினால் ₹11 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு, ஏடிஎம் மையங்களையும் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்ய உயர்த்தப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகங்கள் விளக்கம் அளித்துள்ளன.