இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரன், செவ்வாய், சூரியன் உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்களுக்கு ஆய்வு விண்கலன்களை அனுப்பி நாசா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் விண்வெளி மையங்களுக்கு இணையான சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரோவிலிருந்து முதன்முறையாக இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி முதன்முறையாக விண்வெளி செல்ல உள்ள இந்திய வீரர்களின் பெயர்களை அறிவித்தார். அதன்படி, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் (குரூப் கேப்டன்), அஜித் கிருஷ்ணன் (குரூப் கேப்டன்), அங்கத் பிரதாப் (குரூப் கேப்டன்), சுபான்ஷு சுக்லா (விங் கமாண்டர்) ஆகிய நால்வர்தான் இந்தியாவிலிருந்து முதல்முறையாக விண்வெளி செல்ல உள்ள வீரர்கள்.