ஆயுர்வேதார், சித்தா, ஹோமியோபதி, யுனானி உள்ளிட்டவற்றிற்கான AYUSH மருத்துவமனையை தலைநகர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''AYUSH அமைச்சகத்துட்ன கொரொனா தொற்று காலத்தில் இருந்தே தொடரில் இருக்கிறேன். எனக்கு முதல்முறை கொரொனா தொற்று ஏற்பட்டபோது, பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்துப் பேசினார். AYUSH-ல் இருக்கும் ஒரு வைத்தியரின் எண்ணைக் கொடுத்து பேசும்படி கூறினார். அவர் கூறியதைப் பின்பற்றினேன். 2 வது. 3 வது முறை கொரொனா தொற்று பாதித்தபோது, ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்ளாமலே சரியாகிவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்.