இந்தச் சாலை பணாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து, விமான நிலையம் வரை 45 நிமிடங்களில்( முன்பு 75 நிமிடங்கள்) பயணிக்கலாம். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலும் குறைந்துள்ளது. அதேபோல் லஹார்தாராவில் இருந்து கசாஹ்ரிக்கு 15 நிமிடங்களில்( முன்பு 30 நிமிடங்கள்) செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ''காசிக்குச் சென்றதும் ஷிவ்பூர்- புல்வாரியா- லஹார்தாரா சாலையை ஆய்வு மேற்கொண்டேன். சமீபத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், நகரின் தெற்குப் பதிதியிலுள்ள மக்களுக்கு உதவும்'' என்று தெரிவித்துள்ளார்.