அசாம் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினருக்கு சொந்தமான சுமார் 8.10 கோடி சதுர அடி நிலத்தை மகாபால் சிமெண்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கிய அசாம் அரசின் முடிவுக்கு கவுஹாத்தி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலம் தரிசு நிலம் என்றும், சிமெண்ட் ஆலைக்கு அது அவசியம் என்றும் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் மேதி, " 8.10 கோடி சதுர அடி நிலம் என்பது ஒரு முழு மாவட்டத்திற்கு சமம். ஒரு தனியார் நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய நிலப்பரப்பு ஒதுக்கப்படுகிறதா? தரிசு நிலமாக இருந்தாலும், இவ்வளவு பெரிய பரப்பளவை எப்படி ஒரு நிறுவனத்திற்கு வழங்க முடியும்? இது என்ன மாதிரியான முடிவு? என்று கேள்விகளை எழுப்பினார்.