மோடி தேசத்தந்தை என்றால் மகாத்மா காந்தி யார்? ட்ரம்பை கேள்வி கேட்கும் ஓவைசி

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (18:22 IST)
மோடியை இந்தியாவின் தேசத்தந்தை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழ்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பிறகு பேசிய அதிபர் ட்ரம்ப் “மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்கா – இந்தியா இடையேயான உறவு வலுவடைந்துள்ளது. மோடி பிரதமராக பொறுப்பேற்கும் முன்னர் இந்தியாவை தனிப்பட்ட முறையில் தெரியாது என்றாலும், பிளவுப்பட்டு கிடந்தது என்பதை அறிவேன்.

தற்போது மோடி அவற்றையெல்லாம் களைந்து இந்தியாவை ஒன்றுபடுத்தியிருக்கிறார். அவரை இந்தியாவின் தந்தை என்றுதான் நாம் அழைக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் இதை கொண்டாடினாலும், காங்கிரஸ் மற்றும் மற்ற எதிர்கட்சிகள் ட்ரம்ப்பின் இந்த கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன. இதுகுறித்து பேசிய எம்.பி அசாசுதீன் ஓவைசி “ட்ரம்ப்புக்கு இந்திய சுதந்திர போராட்டம் பற்றிய ஞானம் கிடையாது. மகாத்மா காந்தியுடன் ஒப்பிடப்பட்டதால் மோடி தேசத்தந்தை ஆகிவிட முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒருபக்கம் மோடியையும் புகழ்கிறார், மற்றொரு பக்கம் இம்ரான்கானையும் புகழ்கிறார். ட்ரம்ப்பின் இரட்டை விளையாட்டுக்கு இந்தியா பலியாக கூடாது” என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்