மாநில அந்தஸ்தை இழந்தது ஜம்மு காஷ்மீர்.. நாடாளுமன்ற சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும்

திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (12:36 IST)
சட்டப்பிரிவு 370 ரத்தால் மாநில அரசியல் சாசன அவையை இழந்தது ஜம்மு காஷ்மீர்.

2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் அரசியல் சாசனம் சட்டப்பிரிவு ஆர்டிகிள் 370 கீழ் வரும் 35 A-வின் காஷ்மீருக்கு வ்சழங்கப்பட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. பயங்கரவாதிகளை ஒடுக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார்.

அரசியல் சாசன சட்டப்பிரிவு 370, காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார்? அவர்களுக்கான் தனி சலுகைகள் என்ன என்பதை கூறுகின்றன. அதன் படி
”காஷ்மீரில் வசிக்கும், நிரந்தர குடியுரிமையினர் தவிர, நாட்டின் வேறெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு நிலமோ சொத்தோ வாங்கமுடியாது.

காஷ்மீரைச் சேர்ந்த பெண் ஒருவர் வேறு மாநிலத்தவரை திருமணம் செய்தால், அந்த பெண்ணின் குடியுரிமை ரத்து செய்யப்படும். இதை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள், அம்மாநில அரசு வேலையில் இடம்பெற முடியாது.
 அதே போல் காஷ்மீர் அரசு கல்லூரிகளிலும் மற்ற மாநிலத்தைச் சேந்தவர்கள் பயில முடியாது. மேலும் காஷ்மீர் அரசு வழங்கும் உதவுத் தொகை, சமூக நலத்திட்டங்கள் என எந்த நிதி உதவியும் காஷ்மீரின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களே வாங்கமுடியும்.


ஒட்டுமொத்த இந்திய அரசியல் சானத்தில், ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு போன்ற சட்டங்கள் மட்டுமே காஷ்மீரில் செல்லுபடியாகும். பிற சட்டங்கள் இங்கு செல்லுபடியாகாது போன்ற தனி சலுக்கைகளை அரசியல் சட்டப்பிரிவு 370 கூறுகிறது.

தற்போது 370 ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்துள்ளதால் மேற்குறிப்பிட்ட அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது.

அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டதை, தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அரசியல் சாசன நகலை கிழிக்க முயன்றதால் 2 எம்.பி,.க்கள் மாநிலங்கவையிலிருந்து வெளியேற்றப்பட்டன. எனினும் பகுஜன் சமஜ்வாடி கட்சி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டதால் இனி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்