நியூஸ் கிளிக் நிறுவனர் கைது நடவடிக்கை சட்ட விரோதம்..! உடனடியாக விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!!

Senthil Velan
புதன், 15 மே 2024 (13:37 IST)
நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பித்துள்ளது.
 
சீனாவுக்கு ஆதரவான செய்தி வெளியிட நிதி பெற்றதாக நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனம் மற்றும் அதன் பத்திரிகையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உபா சட்டத்தின்கீழ் பிரபீர் புரகாயஸ்தா கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் தனது கைதை எதிர்த்து பிரபீர் புர்காயஸ்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

ALSO READ: தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல.! தமிழர் மாண்பு குறைந்து விட்டதா.? ஜி.வி பிரகாஷ் ஆதங்கம்..!!

இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிர்புர் புர்க்யஸ்தாவை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்டவிரோதம் என்றும் பிரபீர் புரகாயஸ்தாவை உடனடியாக விடுதலை செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்