10,000 ராணுவ வீரர்கள் காஷ்மீரில் முகாம்: தாக்குதலுக்கு ஆயத்தமா?

Webdunia
ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (13:22 IST)
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியா நிச்சயமாக இதற்கு பதில் தாக்குதல் நடத்தும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. 
 
இதனால் காஷ்மீரில் மிகவும் பதட்டமான சூழ்நிலையை நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவப்படை எல்லை அருகே தொடர்ந்து அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகிறது.
 
தற்போது 10000 வீரர்கள் காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையால் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். பாரா மிலிட்டரி, சிஆர்பிஎப் உள்ளிட்ட பல்வேறு படை பிரிவுகளை சேர்ந்த 10000 வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். 
 
இந்நிலையில், இந்திய அரசுக்கு போருக்கு தயாராகிறதா என்ற கேள்விகள் எழுந்தது. இதற்கு காஷ்மீர் ஆளுநர் சத்யா பால் மாலிக் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இது சாதாரண பாதுகாப்பு நடவடிக்கைதான். தேர்தலின் போது எப்போதும் போல் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், தாக்குதல்கள் காரணமாகவும் காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மற்றபடி தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்