சசிகலாவின் மறுசீராய்வு மனு: நியமிக்கப்படாத மற்றொரு நீதிபதி யார்?

வெள்ளி, 30 ஜூன் 2017 (11:50 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சார்பில் மறுசீராய்வு மனு கடந்த மே 3-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி தான் என உறுதி செய்தது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு. இந்த நீதிபதிகள் அமர்வு தான் மறுசீராய்வு மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
இந்த மனு மீதான விசாரணை ஜூலை முதல் வாரத்தில் வரலாம் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விசாரணை அமர்வில் உள்ள நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடந்த மே 27-ஆம் தேதியே ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த அமர்வுக்கு புதிய நீதிபதி ஒருவரை நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 
அந்த புதிய நீதிபதி யார் என்பதை நியமிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹருக்கு உள்ளது. ஆனால் அவர் இன்னும் புதிய நீதிபதியை முடிவு செய்யவில்லை. அதன் பின்னர் தான் இந்த மறுசீராய்வு மனு விசாரணைக்கு வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்