இதனால் தமிழகத்தில் மக்கள் போராட்டம் வெடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தது. மத்திய, மாநில அரசிகள் மக்களுக்கு அடிபணிந்தது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடைக்கும் விதமாக மாநில அரசு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. அதற்கு மத்திய அரசும், குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கினர்.
இதனையடுத்து இந்த வருடம் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடைபெற்றதாக கூறி பீட்டா அமைப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மிருகவதை நடைபெற்றதற்கான ஆதரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளது பீட்டா. இதனையடுத்து ஜல்லிக்கட்டு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.