ஓட்டல் சர்வர்கள் என்றால் கேவலமா?: சுப்பிரமணியசாமிக்கு சோனியா மருமகன் கேள்வி

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (04:30 IST)
வாழ்வதற்காக கடுமையாக உழைக்கும் ஓட்டல் சர்வர் வேலை கண்ணியமற்ற தொழிலா? என்று பா.ஜ.க., எம்.பி., சுப்பிரமணியசாமிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
வாழ்வதற்காக கடுமையாக உழைக்கும் ஓட்டல் சர்வர் வேலை கண்ணியமற்ற தொழிலா? என்று  பா.ஜ.க., எம்.பி.,  சுப்பிரமணியசாமிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
வெளிநாடுகளுக்கு செல்லும் மத்திய மந்திரிகளுக்கு ஆடை வி‌ஷயத்தில் அக்கறை செலுத்துமாறு பா.ஜனதா தலைமை அறிவுறுத்த வேண்டும். ஆங்கிலேயர் பாணியில் கோட் மற்றும் டை அணிந்து இருக்கும் அவர்களை பார்ப்பதற்கு ஓட்டல் ஊழியர்களை போல் தோற்றமளிக்கின்றனர் என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியசாமி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
 
அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, ஓட்டல் சர்வர் வேலை கண்ணியமற்ற தொழிலா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், வாழ்வதற்காக கடுமையாக உழைக்கும் ஓட்டல் சர்வர்களை தொடர்புபடுத்தி, இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை சுப்பிரமணியசாமி தெரிவிப்பது வருத்தத்துக்குரியது’ என கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்