பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

Mahendran

புதன், 23 ஏப்ரல் 2025 (15:38 IST)
பிரதமர் மோடி ஏற்கனவே நேற்று சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்த நிலையில் இன்னொரு பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதலில் இரண்டு வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த சம்பவம் காரணமாக பிரதமர் மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை ரத்து செய்துவிட்டு நேற்று உடனே நாடு திரும்பினார் என்பதும் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நாளை பிரதமர் மோடி கான்பூர் செல்ல இருந்த நிலையில் அந்த பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன.
 
கான்பூரில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் செல்ல இருந்தார் என்ற நிலையில் தற்போது அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் குறித்த மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்