காலவரையற்ற உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே அறிவிப்பு!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (16:30 IST)
பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனைக்கு அனுமதி அளித்த மகாராஷ்ட்ரா அரசை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்
 
 இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இருப்பினும் மகாராஷ்டிரா மாநிலம் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு அனுமதி அளித்ததை திரும்ப பெறுவது இல்லை என அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்