ரபேல் விவகாரத்தால் டிவி சேனல் மீது வழக்கு தொடர்ந்த அம்பானி

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (13:43 IST)
ரபேல் ஒப்பந்தம் விபரங்கள் தொடர்பாக தன்னை பற்றி அவதுாறு செய்திகளை ஒளிபரப்பியதாக ரூ.10,000 கோடி கேட்டு பிரபல தனியார் தொலைக்காட்சியின் மீது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் அகமதாபாத் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் வாராந்திர விவாத நிகழ்ச்சி ஒன்றில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள்  உள்ளிட்டோருக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதனை மறுத்து வந்தது ரிலைன்ஸ் குழுமம்,
 
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் அனில் அம்பானியின்  ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதில், கையாளப்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும்,  இந்தியா மட்டுமின்றி பிரான்ஸ் அரசு கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
 
சமீபத்தில் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விவரங்கள் குறித்து அப்போதைய பிரான்ஸ் அதிபராக இருந்த பிரான்கோயிஸ் ஹோலண்டேவும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது குறித்தும் அவதூறு கருத்துக்கள் இடம்பெற்றதாக கூறி அந்த தொலைக்காட்சியின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை அந்த தொலைக்காட்சி நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த அவதூறு வழக்கு அக்.,26 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்