சபரிமலை கலவர பூமியாக மாற விரும்பவில்லை - கேரள அமைச்சர் விளக்கம்

வெள்ளி, 19 அக்டோபர் 2018 (10:21 IST)
சபரிமலை கலவர பூமியாக மாற அரசு விரும்பவில்லை என கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு பக்தர்களை தவிர செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கிய கேரள அரசு பெண்கள் அனுமதிக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது.
 
இந்நிலையில் தெலுங்கானா தனியார் டிவி.,யின் செய்தி வாசிப்பாளர் கவிதா மற்றும் கொச்சியை சேர்ந்த பெண் பக்தர் ஒருவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை சென்றனர்.
 
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன்,போராட்டத்தை வெளிப்படுத்துவதற்கான இடம் சபரிமலை இல்லை என்றும்  பக்தர்கள் எதிர்ப்பால் பத்திரிகையாளர் உள்பட 2 பெண்களையும் திரும்பிச் செல்ல வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார். 
 
கேரள அரசின் நோக்கம் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பது தான், போராட்ட எண்ணம் உடையவர்களை அனுமதிப்பதல்ல. அந்த இரு பெண்களுள் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர். மற்றொருவர் செய்தியாளர். இது லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்